வலிமையான பாரத்தை பற்றி கனவு கண்டவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவன் மாளிகையில் சிதம்பரம் பிள்ளையின் உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் வ.உ.சி.யின் பேத்தி மரகத வள்ளி மற்றும் பேரன் ரெங்கநாதன் இருவரும் பங்கேற்று உரையாற்றினர்.
இவர்களைத் தொடர்ந்து தனியார் பள்ளி மாணவர்களும் மற்றும் தனியார் கல்லூரி மாணவிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வ.உ.சி பற்றி மேடையில் உரையாற்றினர். குறிப்பாக 3 மழலை குரலை கொண்ட பள்ளி மாணவர்கள் வ.உ.சி பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாற்றி ஆளுநரை ரசிக்க வைத்தனர்.
அதன் பின் மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம் இன்று. நாம் அனைவரும் சுதந்திரத்திற்கு பிறகு தான் பிறந்தோம். நம் நாட்டை பிரிட்டிஷ் விட்டு சென்ற பொழுது எப்படிபப்பட்ட நிலையில் இருந்தது என்று நமக்கு தெரிய வாய்ப்பு இல்லை. பிரிட்டிஷ் நமது உழைப்பை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உறிந்தனர். 1750 உலகமயமாதலின் முன்பு இந்தியாவின் பங்கு சீனா விட அதிகமாக இருந்தது. பல ஆயிரம் மக்கள் சுதந்திரம் வேண்டி தங்களின் உயிரை விட்டனர். அதில் சிதம்பரம் பிள்ளை பணக்கார குடும்பத்தில் இருந்தும் சுதந்திரத்திற்கு போராடினார்.
பிரஸ்டிஷ் ஆட்சியில் பணக்கார பண்ணையார் செல்வந்தர்களுக்கு அதிக அளவிற்கு சுதந்திரம் இருந்தும் சிதம்பரம் பிள்ளை உபயோகம் செய்யவில்லை. சுதந்திரம் அனைவருக்காகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினார். முஸ்லீம் மற்றும் பெங்கால் போன்ற பிரிவினைகளை உருவாக்கி ஹிந்து மற்றும் முஸ்லீம் இடையே பிரிவினையை உருவாக்கினர்.

இப்பொழுது தான் தமிழ்நாடு, கேரளம் , ஆந்திரா என்று உள்ளோம். ஆனால் அப்பொழுது நாட்டில் எதோ ஒரு மூலையில் இருந்த நபர்கள் பிரிட்டிஷ் எதிர்த்து போராட்டம் செய்தால் அப்படி ஒரு கொண்டாடமாக இருக்கும்.
சுதேசி இயக்கம் மூலம் சிதம்பரம்பிள்ளை அப்பொழுதே, நமது நாட்டு பண்டங்களை தயாரிக்கும் பணியை செய்தார். பிரிட்டிஷ் காலத்தில் இருந்த ஜெயில் அறைகள் மிக கொடுமையாக இருக்கும். அதில் இருந்து கஷ்டபட்டு சிதம்பரம் பிள்ளை சுதந்திரத்திற்காக போராடினார். நிச்சாயமாக நம் மாணவர்கள் அந்த சிறைகளை சென்று கண்காட்சி போல காண வேண்டும்.அனைத்து சுதந்திர வீரர்களையும் ஆழமாக படியுங்கள். வலிமையான பாரதத்தை பற்றி சிதம்பரம் பிள்ளை கனவு கண்டார் என்று கூறினார்.







