சாத்தான்குளம் அருகே கள்ளச்சாராய ஊறல் அமைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 13 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கள்ளச்சாராயம் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த. இதனையடுத்து சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் தலைமையில் தனிப்படை போலீசார் சடையன்கிணறு லயன் தெருவை சேர்ந்த சின்னதுரை என்வருக்கு சொந்தமான தோட்டத்தில் சோதனை நடத்தினார்.
அப்போது அங்கு அவர் 15 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 1 லிட்டர் கள்ளச்சாராயம், ஒரு கேஸ் ஸ்டவ் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-அனகா காளமேகன்






