பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ள வேலை,பணிபாதுகாப்பு குறித்த அச்சம்

கொரோனா 2-வது அலை தாக்கம் காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் பணிபாதுப்பு குறித்து ஆண்களைவிட வேலைக்கு செல்லும் பெண்களே அதிகளவு கவலையுடன் உள்ளனர் என் லிங்க்ட்இன் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிங்க்ட்இன் (Linkedin) நிறுவனம் சார்பில் கொரோனா…

கொரோனா 2-வது அலை தாக்கம் காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் பணிபாதுப்பு குறித்து ஆண்களைவிட வேலைக்கு செல்லும் பெண்களே அதிகளவு கவலையுடன் உள்ளனர் என் லிங்க்ட்இன் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிங்க்ட்இன் (Linkedin) நிறுவனம் சார்பில் கொரோனா பேரிடர் காலத்தில் பணியாளர்களிடம் வேலைவாய்ப்பு சூழல் குறித்து 1,891 நபர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பு ஆய்வில் நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் சூழல் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலைவாய்ப்பு கடந்த மே மாதம் 35 சதவீதமாக இருந்ததைவிட ஏப்ரல் மாதத்தில் 10 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்தாலும் நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வேலைக்கு ஆட்களைத் தேர்வுச் செய்கிறார்கள் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு சார்ந்த நம்பிக்கை குறியீடு கடந்த மார்ச் மாதம் இருந்த 58 சதவீதத்திலிருந்து 54 சதவீதமாகக் குறைந்துள்ளது.

குறிப்பாக பொழுதுபோக்கு, வடிவமைப்பு மற்றும் ஊடகத் துறைகளில் வேலைவாய்ப்பு சூழ்நிலை நிலையற்றதாக உள்ளது. அதேசமயம் மென்பொருள், தகவல் தொழில்நுட்பம், ஹார்டுவேர், நெட்வொர்க்கிங் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் வேலைக்குச் செல்லும் பெண்கள், இளைஞர்கள் தங்களின் வேலை சார்ந்த எதிர்காலத்தின் மீது பெரிதும் நம்பிக்கை இழந்துள்ளதாகக் கூறுகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்களில் நான்கில் ஒருவர் பணிபாதுகாப்பு குறித்த அச்சத்தில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 23 சதவீதமான பெண்களும் 13 சதவீதமான ஆண்களும் வேலைவாய்ப்பு குறித்தும், பணிபாதுகாப்பு குறித்த அச்சத்தில் உள்ளனர்.

இதன்படி பெண்களின் வேலை சார்ந்த நம்பிக்கை குறியீடானது மார்ச் மாதம் 57 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதத்தில் 49 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆண்களின் நம்பிக்கை குறியீடு 58லிருந்து 56ஆகக் குறைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.