நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கு பாஜக குரல் கொடுக்குமா என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப் பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்தின், நீட் தேர்வுக்கு ஒரு புறம் தயாராக சொல்லும் அரசு, மறுபுறும் விலக்கு கேட்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறவேண்டும் என்பது தான் திமுக, அதிமுகவின் நிலைப்பாடாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது எனவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கும்போது, அதற்கு பாஜக குரல் கொடுக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், சட்டத்திற்கு உட்பட்டு விலக்கு கோரினால் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என தெரிவித்தார்.







