யாராக இருந்தாலும் தமிழ்நாடு என சொல்ல வைத்து விடுவோம் – கனிமொழி எம்பி பேச்சு

யாராக இருந்தாலும் தமிழ்நாடு என நாங்கள் சொல்ல வைத்து விடுவோம் என சென்னையில் நடைபெற்ற  நம்ம ஊரு திருவிழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் துவக்க விழா தீவுத்திடலில் நடைபெற்றது.…

யாராக இருந்தாலும் தமிழ்நாடு என நாங்கள் சொல்ல வைத்து விடுவோம் என சென்னையில் நடைபெற்ற  நம்ம ஊரு திருவிழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் துவக்க விழா தீவுத்திடலில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விழாவை துவக்கி வைத்து
உரையாற்றினார். தொடர்ந்து மேடையில் நடன இசை நிகழ்ச்சிகளை நடத்திய கலைஞர்கள் கனிமொழி  எம். பி மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருடன்
புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது..

”பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா மீண்டும் சென்னையில் நடைபெறுவதற்கு ஒரு வாய்ப்பை அரசாங்கம் வழங்கியதற்கும், அதை நடத்தக்கூடிய நிலையை உருவாக்கி தந்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி.

இங்கு நடைபெறுவது போல தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு தருவதாக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் அவர்கள் தனது உரையில் குறிப்பிடும்போது  இங்கே இருக்கக்கூடிய மண் சார்ந்த கலைஞர்களுக்கு ஊதியத்தை 2000 லிருந்து 5000 ஆக உயர்த்தி தருவதாக தெரிவித்திருக்கிறார்.” என்று கூறினார்.

தமிழகம் என்று சொல்லி வரும் ஆளுநர் தமிழ்நாடு என்று சொல்லி இருக்கிறார்  என பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு  “யாராக இருந்தாலும் நாம் நினைப்பதை நாங்கள் சொல்ல வைத்து விடுவோம் என்பதற்கு இது ஒரு சான்று”  என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.