முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பெரியார் வழியில் அன்பாலான உலகை உருவாக்குவோம்: பினராயி விஜயன்

’பெரியார் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்’
என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார்
பிறந்த நாள் விழா, இனி சமூகநீதி விழாவாகக் கொண்டாப்படும் என தமிழ்நாடு முதல மைச்சர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட் டார். அதன்படி, பெரியாரின் 143-வது பிறந்த நாளான இன்று, சமூகநீதி நாளாகக் கொண்டாடப் படுகிறது.

இந்நிலையில், சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள
உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். மேலும், பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாகக் கொண்டாடும் விதமாக
அரசு அலுவலகங்களில் சமூகநீதி நாள் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சியினர் பெரியாருக்கு
மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,
சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக
தேவைப்படும் இந்தக் காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை
உருவாக்க உறுதி கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

டெல்டா பிளஸ் வைரஸால் 12 மாநிலங்களில் பாதிப்பு

Gayathri Venkatesan

மதுரையை சிட்னியாக மாற்றுவேன் – செல்லூர் ராஜூ!

Jeba Arul Robinson

சீன மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது த்ரிஷ்யம்-2 !

Vandhana