முக்கியச் செய்திகள் தமிழகம் Agriculture

அதிக லாபம் ஈட்டும் இயற்கை விவசாயம்; அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நெல்லை விவசாயிகள்

பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டி, பணகுடி விவசாயிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் ,ரோஸ்மியாபுரம் பகுதிகளில்
நடப்பாண்டு பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்த விவசாயிகள் அதிக லாபம் ஈட்டியுள்ளனர். பாரம்பரியமாக இயற்கை முறையில் நடவு செய்து அறுவடை செய்த காலம் மாறி பூச்சிகொல்லிகளையும், ரசாயன உரங்களையும் பயன்படுத்தி தற்போது விவசாயம் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக மனிதர்களுக்கு நோய்களும் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதிலிருந்து மாற வேண்டும் என்றும் ஆரோக்கிய வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில், பணகுடி பகுதிகளைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களான காட்டுயானம், கிச்சடி சம்பா, புல்லங்காறு, கருங்குறுவை, தூயமல்லி போன்றவற்றை நடவு செய்தனர்.

இதற்குப் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு தான் என்கின்றனர் விவசாயிகள். மேலும் நடப்புண்டு பருவமழை காலம் தவறிப் பெய்ததினால் சற்று பாதிப்பு என்றாலும் இயற்கை விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டியதாக விவசாயிகள் தரப்பில் கூறுகின்றனர்.

1 ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை போதுமானது. இதன் வாயிலாக 2200 கிலோ நெல் பெற
முடியும். 144 கிலோ நெல் 4500 ரூபாய் வரை விற்பனையாகிறது. இயற்கை விவசாயத்தின்
வாயிலாகக் கிடைக்கப்பெறும் வைக்கோல் கால்நடைகளுக்கு உணவாக அளிக்கும் பட்சத்தில் சத்தான பால் பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நெல் ரகங்களை உணவாக உட்கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய் உட்படப் பல நோய்கள் நம்மை அண்டாது என்பது விவசாயிகளின் ஆணித்தரமான நம்புகின்றனர்.

விவசாயத்தில் நெற்பயிர்களைப் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் பாரம்பரிய நெல்
ரகங்களைக் கொண்டு இயற்கை முறையில் விவசாயம் செய்யவேண்டும் என்பது வலுவான வேண்டுகோளாக இருக்கிறது. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் இயற்கை விவசாயத்தின் அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ள பாரம்பரிய நெல் ரகங்களை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 50 விவசாயிகள் பார்வையிட்டுக் கலந்துரையாடல் செய்தனர்.

இங்கு 9 உயரம் கொண்டு வளர்ந்துள்ள காட்டுயானம் பயிரின் தொழில்நுட்பத்தின் அடிப்படையை அறிந்து கொண்டுள்ளதால் ஒற்றை நாற்று முறையில் மதுரை மாவட்டத்தில் பயிரிட்டு பலன் பெறுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி குழிக்குள் விரதம் இருக்கும் மனிதர்

EZHILARASAN D

“அரசுக்கு எதிராக மக்கள் தூண்டப்படுகின்றனர்” – திரிபுரா அமைச்சர்

Halley Karthik

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை, பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Nandhakumar