நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என திருச்சி சிவா எம்பியை சந்தித்த பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளனர்.
நேற்று முன் தினம் திருச்சி எஸ்பிஐ காலணியில் உள்ள விளையாட்டு அரங்கை திறப்பதற்காக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு சென்றபோது திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டினர். இந்த நிகழ்வு தொடர்பாக எம் பி சிவா மற்றும் கே.என்.நேரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் எம்.பி சிவா வீடு மற்றும் கார் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த நிலையில் அமைச்சர் நேரு ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா எம் பி வீட்டிற்கு நேரடியாக வந்து அவரிடம் நடந்த நிகழ்வுகளை கேட்டறிந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடந்த நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளருக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய கே என் நேரு தெரிவித்ததாவது..
” நடந்த நிகழ்வு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தொடர்ச்சியாக நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு தஞ்சை மாவட்டம் பூதலூர் சென்று விட்டேன். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் என்னை அழைத்து நீங்கள் இருவரும் கழகத்தை கட்டி காத்து வருபவர்கள். சிவாவை நேரில் சென்று சந்தித்து சமாதானப்படுத்தி வருமாறு தெரிவித்தார். அதன் அடிப்படையில் இன்று சந்தித்து எனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டேன். சிவா என்னை விட வயதில் சிறியவர் அவரை தம்பி என்று அழைப்பதில் தவறில்லை.
நடந்த சம்பவம் குறித்து எனக்கு தகவல் தெரியாது. சிவாவும் வெளிநாடு சென்று விட்டதால் கம்யூனிகேஷன் கேப் ஏற்பட்டது. சிவா பாராளுமன்றத்தில் சிறப்பாக பேசக்கூடியவர். அவருக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது . நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் ” அமைச்சர் நேரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த திருச்சி சிவா எம்பி தெரிவித்ததாவது..
“ நாங்கள் இருவரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். எங்கள் இருவரை பொறுத்தவரை கட்சியின் வளர்ச்சி முக்கியம். பாராளுமன்றத்தில் நான் ஆற்றும் பணிகளை அவரால் ஆற்ற முடியாது. அவராற்றும் பணிகளை என்னால் ஆற்ற இயலாது. ஆனால் இருவரின் பணிகளும் கட்சியின் வளர்ச்சி சார்ந்ததாகவே இருக்கும்.” என திருச்சி சிவா எம்பி தெரிவித்தார்.
திருச்சி சிவா- கே.என்.நேரு பேட்டி குறித்த வீடியோவை காண..