முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”புயல், சுனாமி வந்தால் தாங்கும் அளவிற்கு கட்டடங்களை கட்ட வேண்டும்” – அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை

சென்னை அடையாரில் உள்ள தனியார் விடுதியில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்களுக்கான நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு பற்றிய ஒரு நாள் பயிற்சி அரங்கை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: பொது பணித்துறையில் இதற்கு முன்னர் பயிலரங்கம் நடக்கவில்லை. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்க வேண்டும். நெடுஞ்சாலைதுறையிலும் இதே போன்று பயிலரங்கத்தை நடத்தினேன். ஐஐடி, மத்திய, மாநில பேராசிரியர்கள் கொண்டு 15 நாட்கள் பயிலரங்கம் நடத்தியுள்ளோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நான் பொறியாளராக இல்லை, தமிழாசிரியராக  இருந்தேன் ஆனாலும் பொதுப்பணித்துறையில் எனக்கு அனுபவம் உள்ளது. நாம் புராதான கட்டிடங்களை சீரமைக்கும் பணியை தான் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதேபோல நாம் கட்டக்கூடிய கட்டிடங்களை சீரமைக்கும் பணியை வருங்காலத்தில் மேற்கொள்ளும் பொழுது இந்த கட்டிடங்களை யார் கட்டினார்கள் என்று பெருமையாக பார்க்கும் படி இருக்க வேண்டும். மேலும், மதுரை கருணாநிதி நூலகத்தை மட்டுமே 23 முறை என்னிடம் முதலமைச்சர் விசாரித்துள்ளார்.

அண்மைச் செய்தி: நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் : திருச்சி சிவா எம்பி – அமைச்சர் கே.என்.நேரு கூட்டாக பேட்டி

அவசரமாக வேலை பார்க்கும் போது பூச்சு பணியின் ஏர் கிராக் வந்து விடுகிறது. சமூக வலைதளத்தில் கட்டிடங்களின் தரம் குறித்து நெகட்வ் செய்தி வராமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவ கல்லூரி கட்டியதை சுவர் இடிந்து விழுவதை குறித்து கேள்வி எழுப்புகிறது. அதற்கு கெமிக்கல் சேர்த்து கட்ட வேண்டும். ஆனால் அதற்கு பட்ஜெட்டில் இல்லை, இல்லையென்றால் எப்படி அவர்களை கேட்ட முடியும். எம் சாண்ட் தவிர்க்க முடியாத ஒன்று எனவும் ஆற்று மணலை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆற்றில் மணல் எடுக்கும் நிலைமை எல்லாம் இனி கிடையாது. காவிரி ஆற்று மணலை நம்பி நாம் கட்டிடங்கள் கட்ட முடியுமா ? புதிய தொழில்நுட்பகள் கொண்டு கட்டிடங்கள் பணியில் ஈடுபட்டால் சிறப்பாக இருக்கும். மண் உரிது தன்மை, ஆனால் உதகையில் கட்ட முடியாது.

இந்த ஆண்டு மழையின் பொழுது தண்ணீர் எங்கும் தேங்காது நிலை ஏற்பட்டதால் முதலமைச்சர் பாராட்டினார். ஆனால் அதற்கு முன்பு மழையில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கும், வேப்பேரியில் உள்ளதை நேரில் ஆய்வு செய்தேன். பிரி காஸ்ட் என்ற அடிப்படையில் ஒரே நாளில் கட்டப்பட்டது. இதுபோன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடங்களை கட்ட வேண்டும். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

அண்ணா பெயரில் ஒரு நூலகம் போன்று மதுரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. கருணாநிதி நினைவிடம், கீழடி, கிண்டியில் 200 கோடி பன்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா நினைவு கட்டிடம் கேரளாவில் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான கட்டுமான டெண்டர் விடப்பட்டு, கட்டுமானம் தொடங்கியுள்ளது. அடுத்த வருடம் தமிழ்நாடு முதல்வர் மற்றும் கேரள முதல்வர் திறந்து வைப்பார்கள். வைக்கத்தில் கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறைக்கு பெருமை. கேரளாவில் இருப்பவர்கள் அனைவரும் பார்த்து வியக்கும் அளவிற்கு இந்த கட்டிடம் இருக்க வேண்டும்.

காலத்திற்கு ஏற்றவாறு நவீன யுக்திகளை பயன்படுத்தும் சூழல் வந்துள்ளது. வெளிநாடுகளில் 40 மாடி கட்டிடங்கள் விரைவாக கட்டி முடிக்கும் வகையில் தொழில் நுட்பம் வந்துள்ளது. பொதுப்பணிதுறை எல்லாவற்றுக்கும் மேலாக தாய் துறையாகவும், மக்களுக்கான துறையாகவும் செயல்படுகிறது. தற்போது பசுமை கட்டிடம் உருவாகியுள்ளது. 3டி தொழில் நுட்பம் உள்ளது. இது இன்றோடு முடிய போவதில்லை. ஒவ்வொரு நிதியாண்டிலும் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜம்மு காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

G SaravanaKumar

இராமநாதபுர மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி.

Halley Karthik

”அதிமுகவினர் உயிரை காத்தார்”- முதலமைச்சருக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் பாராட்டு

Web Editor