தவெகவிற்கு ஆதரவளித்த இடதுசாரிகள்; நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த விஜய்…!

தவெகவிற்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களை விஜய் நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. ஆனால் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து தவெக பிற கட்சிகளிடம் ஆதரவு கோரியது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் (5) சிபிஐ (2) சிபிஎம் (2) ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும் ஐ.யு.எம்.எல் கட்சியும் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலுக்கு ஐ.யு.எம்.எல் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தவெகவிற்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களை விஜய் நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற விஜயை அக்கட்சியின் மாநில தலைவர் சண்முகம் வரவேற்றார். பின்னர் அங்கிருந்தவர்களுடன் விஜய் கலந்துரையாடினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.