சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.45.50 கோடி ஒதுக்கீடு!

சென்னை பெருநகரத்தின் எதிர்கால வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், முழுமைத் திட்டங்களைத் தயாரிக்க ரூ.45.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரத்தின் எதிர்கால வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், முழுமைத் திட்டங்களைத் தயாரிக்க தமிழ்நாடு அரசு ரூ.45.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை பெருநகரப் பகுதிக்கான 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மூன்றாவது முழுமைத் திட்டத்தை இறுதி செய்யவும், விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரப் பகுதிக்கான 5,904 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புதிய முழுமைத் திட்டத்தைத் தயாரிக்கவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல், போக்குவரத்து வசதிகள் மேம்பாடு, வீட்டுவசதி, பொருளாதார வளர்ச்சி, நீர்வள மேலாண்மை, வெள்ளத் தடுப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னை பெருநகரத்தின் விரிவாக்கம் மற்றும் எதிர்கால நகர்ப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைத்து திட்டமிடும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.45.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.