முதலமைச்சராக நாளை பதவியேற்கும் விஜய்…?

தவெக தலைவர் விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக நாளை பதவியேற்பக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) ) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது. மேலும் ஐயுஎம்எல் (2) கட்சியும் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சந்தித்தி ஆட்சியமைக்க கோரியுள்ளது. இதனை தொடர்ந்து நாளை காலை 11 : 30 மணிக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

ஆனால் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பாக அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.