திருமாவளவனை நாளை சந்தித்து ஆதரவு கோரும் விஜய்…?

விசிக தலைவர் திருமாவளவனை நாளை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தவெக தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொடர்ந்து இது தொடர்பாக தவெக தரப்பில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது.

அதன் படி காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் திமுக கூட்டணியில் உள்ள் ஐ.யு.எம்.எல் கட்சி தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலை அக்கட்சி தலைவர் காதர் மொகிதீன் மறுத்தார்.

இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருந்து ஆதரவு கோரும் முயற்சியில் தவெக ஈடுபட்டுள்ளது.

இதற்காக விசிக தலைவர் திருமாவளவனை நாளை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, சென்னை அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள விசிக கட்சியின் அலுவலகத்திற்கு நாளை காலை 10 முதல் 11 மனியளவில் தவெக தலைவர் விஜய் வருகை தர உள்ளதாகவும், அப்போது விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆதரவு கோருவார் எனவும் கூறப்படுகிறது. மேலும் அப்போதே விசிக தனது ஆதரவு கடிதத்தை தவெக தலைவர் விஜயிடம் வழங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.