சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது – ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.   கோவை மாவட்டத்தில் நடைபெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, வன்முறைகள் அரங்கேறிவருவதாக குறிப்பிட்டுள்ளார். திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் அன்றாடம் ஓரிரண்டு கொலைகள் மாறி தற்போது பத்து கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

அண்மை காலமாக பெட்ரோல் குண்டு கலாச்சாரம் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. மின்னல் ரவுடி வேட்டை என்ற பெயரில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் கள யதார்த்தம் வேறு மாதிரியாக உள்ளது. உதாரணமாக கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தபோது, வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. இதனால் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு காவல்துறைக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார். எனவே, முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி இதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.