தொடங்கியது 12-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் இன்று 12-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாமில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கையில்…

தமிழ்நாட்டில் இன்று 12-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாமில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து 12-வது கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

2-ஆம் தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் தவறாமல் பங்கேற்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அளவில் இதுவரை 78,34,76,794 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 43,63,92,374 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர். 18-44 வயது உடைய 52,14,52,646 பேர் இன்று முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல, 45+ வயது உடைய 32,71,98,051 பேரும் இன்று முன்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.