முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது; ராகுல் காந்தி

வெளிநாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த புதிய வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது.

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து, அரசின் முக்கிய அதிகாரிகளுடன் நேற்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய வீரியமிக்க கொரோனா இந்தியாவுக்குள் பரவாமல் தடுப்பது பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அடுத்த மாதம் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ள சூழலில், புதிய வகை கொரோனா மிரட்டுவதால் சர்வதேச விமான போக்குவரத்துக்கு சேவையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியதை ஆய்வுசெய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இநிலையில், இதுகுறித்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதிய வகை கொரோனா மிகவும் அச்சுறுத்தலானது எனவும், நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பை அளிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

குறைந்தளவில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கையை வெளியிடுவதில் அரசுக்கு எவ்வித ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது எனவும் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கோடை காலத்தில் முடியை பராமரிப்பது எப்படி?

Saravana Kumar

அவசியமில்லாமல் ஸ்டீராய்டுகளை பயன்படுத்த வேண்டாம்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Halley Karthik

“டோண்ட் லுக் அப்” படத்தை பாராட்டிய கவிஞர் வைரமுத்து

Saravana Kumar