8-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான எட்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம், இன்று 50 ஆயிரம் இடங்களில் தொடங்கியது. கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகளால், தற்போது நோய்தொற்று வெகுவாக…

தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான எட்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம், இன்று 50 ஆயிரம் இடங்களில் தொடங்கியது.

கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகளால், தற்போது நோய்தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, எட்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று காலை தொடங்கியது.

சென்னையில் மட்டும் 2ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. முதல் தடுப்பூசி செலுத்தியவர்களில், இதுவரை 75 லட்சம் பேர் இரண்டாம் கட்ட தவணை தடுப்பூசிக்கான அவகாசம் முடிவடைந்த பின்னரும், போடமால் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் முகாமில் 2ம் தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் தவறாமல் பங்கேற்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மாநில அரசிடம் தற்போது 71 லட்சம் தடுப்பூசி டோஸ் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.