சென்னை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால், சிகிச்சைக்கு வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், நர்மதா தம்பதி. விஜயகுமார் மனைவியான நர்மதாவை மாதவிடாய் காரணமாக புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளார். நேற்று காலை 10.00 மணி அளவில் நர்மதாவை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்த நிலையில், மதியம் 2.00 மணி வரை எந்த மருத்துவர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், நர்மதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் அவரது உடல் மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மாலை 4.00 மணி அளவில் ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நர்மதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான மருத்துவர் இல்லாதது தான் அவருடைய உயிரிழப்புக்கு காரணம் என இறந்தவரின் கணவர் கூறியுள்ளார். மேலும் அரசு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் வென்டிலேட்டர் இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரூபி.காமராஜ்







