சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். …

சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  அந்த வகையில்,  சென்னையில் Kawarlal pharmaceutical நிறுவனம் தொடர்பான இடங்களில் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டிற்கு மருந்து பொருட்களை ஏற்றுமதி,  இறக்குமதி செய்யும் இந்த நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், சென்னை ராயபுரத்தில் Manish parasmal Jain என்ற மருந்து நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னை ஆயிரம் விளக்கு,  எழும்பூர், வில்லிவாக்கம், மாதவரம்,  மண்ணடி,  தாம்பரம்,  குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனையும், விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பின்னரே,  கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான முழு விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.