கோத்தகிரி: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 கரடிகள் | பொதுமக்கள் அச்சம்!

கோத்தகிரி அருகே அரவேணு குடியிருப்பு பகுதியில் நுழைந்த 4 கரடிகளால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக உணவு, தண்ணீர்…

கோத்தகிரி அருகே அரவேணு குடியிருப்பு பகுதியில் நுழைந்த 4 கரடிகளால்
கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக உணவு, தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சாதாரணமாக உலா வருகிறது.

இதையும் படியுங்கள்: தெலங்கானாவுக்கு சந்திரசேகர ராவ் என்ன செய்தார்? – ராகுல் காந்தி கேள்வி!

இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லும் மஞ்சமலை சாலையில் பகல்
நேரத்தில் சாலையில் 4 கரடிகள் ஒய்யாரமாக நடந்து சென்றது.  இதனை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர்.  அந்த 4 கரடிகளும் நீண்ட நேரம் சாலையில் சுற்றி திரிந்தது.  பின்னர் அருகில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் சென்றது.

தொடர்ந்து  பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் கரடிகள், கிராம மக்கள் யாரையாவது தாக்கும் முன் வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் பிடித்த கரடிகளை வேறு பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.