முக்கியச் செய்திகள் விளையாட்டு

டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா

டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. ரெய்னா இல்லாமல் களமிறங்குகிறது சென்னை.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐபிஎல் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து ‘பிளே-ஆப்’ சுற்றுகள் நடந்தன. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வென்றது.

இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில் கொல்கத்தா வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி இன்று மோதுகிறது.

இந்த போட்டியில், டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. இந்த போட்டியிலும் ரெய்னா இல்லாமல் களமிறங்குகிறது சென்னை அணி.

சென்னை அணி சார்பாக டு பிளசிஸ், கெய்க்வாட், அலி, ராயுடு, உத்தப்பா, தோனி, ஜடேஜா, பிராவோ, தாக்கூர், சாஹர், ஹேசில்வுட் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

அதே போல கொல்கத்தா அணியில் சார்பாக,எஸ் கில்,  ஐயர், திரிபாதி, ராணா, மோர்கன்,  கார்த்திக், அல் ஹசன், நரைன், பெர்குசன், சக்கரவர்த்தி, மாவி ஆகியோர் களமிறங்குகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக பொதுக்குழு வழக்கு; இன்று தீர்ப்பு

G SaravanaKumar

“மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Jeba Arul Robinson

’லவ் யூ சார்..’ லிங்குசாமியை அப்படி பாராட்டும் பிரபல ஹீரோ!

Gayathri Venkatesan