நயன்தாரா நடிப்பில் உருவான மாய நிழல் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
வித்தியாசமான கதைக்கரு, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நயன்தாரா தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்தா படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் அப்பு என். பட்டாதிரி இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், நயன்தாரா நடிப்பில் உருவான படம் நிழல்.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தற்போது இந்தப்படம் தமிழில் மாய நிழல் என டப் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் தெரிவிக்கப்படவில்லை.







