ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து ‘பிளே-ஆப்’ சுற்றுகள் நடந்தன. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வென்றது.
இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில் கொல்கத்தா வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி இன்று மோதுகிறது.
இந்நிலையில் இன்றை போட்டியின் எதிர்பார்ப்புகளை பார்ப்போம்.
- T20 போட்டிகளில் தோனிக்கு இது 300வது போட்டியாகும்
- IPL போட்டிகளில் ஜடஜாவுக்கு இது 200வது போட்டியாகும்
- IPL போட்டிகளில் டு ப்ளஸி இது 100வது போட்டியாகும்
- CSK 9வது முறையாக finalல் நுழைந்துள்ளது
- கேப்டனாக இன்னும் 14 ரன்கள் அடித்தால் T20 போட்டிகளில் 6000 ரன்களை குவித்தவர் என்கிற பெருமையை பெறுவார் தோனி
- இன்னும் 11 ரன்கள் அடித்தால் T20 போட்டிகளில் 5500 ரன்களை குவித்தவர் என்கிற பெருமையை பெறுவார் ராயுடு
- இன்னும் 55 ரன்கள் அடித்தால் T20 போட்டிகளில் 7000 ரன்களை குவித்தவர் என்கிற பெருமையை பெறுவார் உத்தப்பா
https://twitter.com/StarSportsTamil/status/1448982912733310977
இந்நிலையில் சென்னை அணிக்கு வாழ்த்து கூறி நடிகர் சூர்யா, தோனி குறித்து பெருமையாக பேசியுள்ளார். “தோனி குறைந்த ரன்களை அடிக்கிறார். ஆனால், அதை எந்த சூழலில் அடிக்கிறார் என்பதுதான் முக்கியம்.” என்று சூர்யா கூறியுள்ளார்.
மேலும், தோனிக்கும் அவருக்கும் இடையேயான நட்பு குறித்தும், சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.









