முக்கியச் செய்திகள் உலகம்

வடகொரியாவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது – கிம் ஜாங் உன்

கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் வடகொரியாவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய கிம் ஜாங் உன், அரசின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் கட்சியின் முடிவுகளை சரியாக செயல்படுத்த தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இதனால் பெரும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும், அந்த நெருக்கடியான சூழலால் நாட்டின் பாதுகாப்பும் மக்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படலாம் என அதிபர் தெரிவித்துள்ளதாக வடகொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களை மாற்றி புதிய நபர்களை பொறுப்புகளில் நியமித்து கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் இதுக்குறித்து கருத்து தெரிவித்த தென்கொரியாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர், சோய் ஜாங் குன், வடகொரியாவின் நிலை குறித்து எங்களுக்கு தெரியும் ஆனால் இப்பொழுது அதற்கு மேல் வேறு எதுவும் கூறமுடியாது என தெரிவித்தார். மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வட கொரியாவிற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தென் கொரியா தயாராக இருந்தும், அதனை ஏற்க வடகொரியா மறுத்துவிட்டதாக தெரிவித்தார். அதுமட்டும் அல்லாமல் வடகொரியாவில் இதுவரை எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால் வட கொரியாவில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றே அதிபர் கிம் ஜாங் உன் கூறி வந்தார். ஆனால் தற்போது திடீரென வட்கொரியா ஆபத்தான நெருக்கடி சூழலில் சிக்கியுள்ளது என எதை அடிப்படையாக வைத்து கூறுகிறார் என்பது தெரியவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

ஏற்கெனவே வடகொரியாவில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியான சூழலில் தற்போது அந்நாடு இக்கட்டான நெருக்கடி சூழலில் சிக்கியுள்ளது என அந்நாட்டு அதிபரே குறிப்பிட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த இக்கட்டான நெருக்கடி சூழல் என்ன என்பது குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறிப்பிட்டதாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் – அண்ணாமலை வாழ்த்து!

Web Editor

கோயில் நகைகளை உருக்குவதால் கோடிக்கணக்கில் வருமானம் – அமைச்சர்

EZHILARASAN D

மன அழுத்தம்: ஈஷா யோக மையத்தில் உயிரை மாய்த்த வாலிபர்

Web Editor