தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பதவி ஏற்ற குறுகிய காலத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கொரோனா நோய் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்துபேசிய அவர், தேர்தல் அறிக்கையில் கூறியது போல் கொரோனா நிவாரண நிதியாக இரண்டு தவணைகளாக மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் மற்றும், 14 வகை மளிகைப்பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.







