ஒரு கோடி கேட்டு சிறுவனை கடத்தல்; கைதான 4 பேருக்கு குண்டாஸ்

4 வயது குழந்தையை கடத்தி ஒரு கோடி பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை கைது செய்து குண்டர் தடுப்பு காவலில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம்…

4 வயது குழந்தையை கடத்தி ஒரு கோடி பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை கைது செய்து குண்டர் தடுப்பு காவலில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம், அக்கராபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கௌரி – லோகநாதன் தம்பதியின் 4 வயது குழந்தை தருண் ஆதித்யா என்பவர் கடந்த மாதம் 7ந் தேதி நள்ளிரவு காணாமல் போய்விட்டதால் பெற்றோர்கள் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். மேலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

பெற்றோர் கொடுத்த புகார் மனுவை பெற்று கச்சிராபாளையம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.நான்கு வயது குழந்தை காணாமல் போனதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள் காணாமல் போன குழந்தையை உடனடியாக கண்டுபிடிக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி போலிசார் குழந்தை காணாமல் போன பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், சந்தேக நபர்களின் உள்ள தொலைபேசி எண்களை வைத்தும் தீவிர விசாரணை செய்து வந்தனர். அந்த நிலையில் கடந்த மாதம் 14ந் தேதி அன்று மர்ம நபர் குழந்தையின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்கள் குழந்தை உயிருடன் வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் குழந்தையை கொன்று விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.இந்நிலையில் பங்காரம் கிராமபகுதியில் குற்றவாளியின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, மிரட்டல் விடுத்த மர்மநபரின் தொலைபேசி எண்ணை உறுதி செய்து தீவிர வாகன சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் கடத்தப்பட்ட குழந்தை இருப்பதை கண்டறிந்து பெற்றொரிடம் ஒப்படைக்கபட்டது.

கடத்தலில் ஈடுபட்ட சுந்தரசோழன், ஈஸ்டர்ஜாய், ரகுபதி, அருள் ஆகியோரை கைது செய்த நிலையில் நான்கு பேரையும் மாவட்ட எஸ் பி பகலவன் பரிந்துறையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.