சி.வி.சண்முகம் தரப்பினர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை!

எஸ்.பி.வேலுமணி அணியினர் மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிதாக களம் இறங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்து முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்று விட்டார். இந்த தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி அந்த கட்சி 3-வது இடத்தை பிடித்ததால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் சட்டசபையில் இழந்தது. இந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி சட்டசபை தலைவராகவும் எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அதிமுக சட்டமன்ற தலைவராக எங்களை நியமிக்க வேண்டும் பெரும் ஆதரவு எங்களுக்கு தான் உண்டு என்று சபாநாயகரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்தநிலையில், அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணி அணியினர் மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உடனான சந்திப்பு நிறைவடைந்த நிலையில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.