இந்தியப் பங்குச் சந்தை; மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கியது முதல் உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் 60,000 புள்ளிகளை சென்செக்ஸ் கடந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்‌ 358 புள்ளிகள் அதிகரித்து 60,200…

இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கியது முதல் உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் 60,000 புள்ளிகளை சென்செக்ஸ் கடந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்‌ 358 புள்ளிகள் அதிகரித்து 60,200 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 99 புள்ளிகள் அதிகரித்து 17,924 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் மீண்டும் 60 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண்ணும் 18 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

அண்மைச் செய்தி: ‘‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன்’ – ஓபிஎஸ்

சர்வதேச பங்குச் சந்தைகளில் காணப்படும் உயர் வர்த்தக நிலை, கச்சா எண்ணெய் விலை குறைவு, உள்நாட்டின் பணவீக்கம் தொடர்ந்தாலும், சில இடங்களில் குறையும் பண வீக்கம் மற்றும் இந்தியாவில் அந்நிய முதலீட்டாளர்களின் வருகை அதிகரிப்பு, ஜூலை மாத மொத்த வர்த்தக குறியீடு 13.9 சதவீதமாகக் குறைந்தது மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் இந்த எதிரொலிப்பு இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.