முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு கேரளத்தை சேர்ந்த தேசிய நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரளத்திலுள்ள பட்டியாலாவை சேர்ந்த தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர் (21). இவர் நீளம் தாண்டுதல் பிரிவில் தேசியளவில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். இந்நிலையில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதித் தேர்வு கடந்த மார்ச் 16-ம் தேதி பஞ்சாபில் உள்ள பட்டியாலா தேசிய பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இலக்கை தாண்டி சாதனை

நீளம் தாண்டுதலில் சீனியர் பிரிவில் பங்குபெற்ற முரளி ஸ்ரீசங்கர் நிர்ணயிக்கப்பட்ட 8.22 மீட்டர் நீளத்தைத் தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி 8.26 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் பதக்கம் வென்று சாதனைப்படைத்தார். இதன்மூலம் முரளி ஸ்ரீசங்கர் டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

முரளி ஸ்ரீசங்கர் கடந்த 2018-ல் தேசிய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் 8.20 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தவர். இந்நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டிக்காக நடைபெற்ற தகுதி போட்டியில் 8.26 மீட்டர் நீளம் தாண்டி தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’ – பரப்புரையில் முதல்வர் விமர்சனம்

Saravana Kumar

கந்தகாரில் ராக்கெட் தாக்குதல்: அனைத்து விமானங்களும் ரத்து

Gayathri Venkatesan

நூதன முறையில் திருட்டு; போலி சாமியார் கைது

Saravana Kumar