சொமாட்டோ ஊழியரை தாக்கியதாக கூறப்படும் பெண் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வேறு இடத்திற்கு சென்றுவிட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
கடந்த வாரம் பெங்களூரைச் சேர்ந்த ஹித்தேஷா சந்த்ரானீ சொமாட்டோ செயலி மூலம் உணவு ஆடர் செய்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் உணவு விநியோகம் செய்யப்படாததால், அவர் வாடிக்கையாளர் சேவை மையத்தை அனுகினார். பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு உணவு விநியோகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, ஊழியரிடம் உணவு விநியோகம் செய்ய நீண்ட நேரம் ஆனது குறித்து வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சொமாட்டோ ஊழியர் காமராஜ் அவரை தாக்கிவிட்டு சென்றதாக கூறி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் காமராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர், இது தொடர்பான வீடியோ ஒன்றை புகைப்படத்துடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சொமாட்டோ நிறுவனம் ஊழியர் காமராஜை தற்காலிகமாக பணி நீக்கம் செய்தது.
இதுகுறித்து ஊழியரிடம் விசாரித்த போது, காலணியால் தன்னை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளை கூறி அவமத்தித்தாக போலீசாரிடம் குற்றஞ்சாட்டினார். மேலும் அப்பெண் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரையடுத்து, ஹித்தேஷாவின் வீட்டு முகவரி ஆன்லைனில் வெளியானது. இதனால் ஹித்தேஷா ஊரை விட்டு வெளியேறிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த கருத்துக்களை தெரிவிக்க ஹித்தேஷாவிற்கு கால அவகாசம் அளித்துள்ளதாகவும் மற்றும் விசாரணையின் போது அவர் வர மறுத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெங்களூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.







