போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!

கேரள மாநிலம் பாறசாலை அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், இளைஞர்கள் போதையில் தினமும் ஒருவரையொருவர் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே முக்கால…

கேரள மாநிலம் பாறசாலை அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், இளைஞர்கள் போதையில் தினமும் ஒருவரையொருவர் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் பாறசாலை அருகே முக்கால புறவழிச்சாலை பகுதியில் போதை இளைஞர்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சினிமாவை மிஞ்சும் வகையில் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

மேலும், ஏற்கனவே ஒரு இளைஞரை 4 இளைஞர்கள் சேர்ந்து தாக்கும் காட்சிகள் வெளியான நிலையில்,  ஏன்? எதற்காக? என தகவல் தெரியாமல் போதையில் தினமும் இது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பாறசாலை போலீசார் இந்த இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.