ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி. மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரான இவர் நேற்று ஸ்ரீ நகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது காஷ்மீரி மொழியில் பேசத் தொடங்கிய முஃப்தியிடம் செய்தியாளர் ஒருவர் உருது மொழியில் பேசக் கோரினார். இதனால் கோபமடைந்த முஃப்தி, ”உங்களுக்கு மொழிபெயர்ப்பு வேண்டுமெனில் நீங்கள் மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆங்கிலத்திலோ அல்லது உருதுவிலோ பேசச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா..? காஷ்மீர் பத்திரிகையாளர்கள் காஷ்மீர் மொழிக்கு சிறிது மரியாதை காட்ட வேண்டும்” என்றார்
தொடர்ந்து பேசிய அவர், “நாடு முழுவதும் சகிப்புத்தன்மை அதிகரித்துள்ளது. கூட்டு படுகொலைகள் நடக்கின்றன. வங்கதேசத்தில் நடைபெறும் சம்பவங்கள் எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஆனால் அதை விமர்சிப்பவர்கள் இங்கு படுகொலைகள் நடக்கும்போது மௌனப் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள்” என்றார்.







