நடிகர் விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜன நாயகன்’. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
என்னுடைய படத்தின் (ராஜாசாப்) முன் வெளியீட்டு விழாவில் பிஸியாவதற்கு முன்பு, ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த என்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி விடுகிறேன்.
விஜய் சாருடன் வேலைப் பார்த்தது மிகவும் கௌரமாக கருதுகிறேன். அவரை என் நண்பர் எனக் கூறிக்கொள்வது அதைவிடவும் பெருமையாக இருக்கிறது.
எல்லா வகையிலும் அவர் மிகவும் சிறப்பான மனிதர். பல லட்சக் கணக்கான ரசிகர்களைப் போல நானும் அவருக்கும் அவரது படக்குழுவிற்காகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்போதும், எப்போதும் தளபதியின் ரசிகைதான்” எனக் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.







