சூடானில் தொடரும் சோகம்; ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் 19 பேர் பலி!…

சூடான் தலைநகர் கார்ட்டூமிலுள்ள சந்தையில் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படையினரைக் குறிவைத்து ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் 19 பேர் பலியாகினர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது…

சூடான் தலைநகர் கார்ட்டூமிலுள்ள சந்தையில் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படையினரைக் குறிவைத்து ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் 19 பேர் பலியாகினர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே ஏற்பட்ட  மோதல் தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இருதரப்புக்கும் இடையே 6 வாரங்களுக்கும் மேலாக மோதல் நடைபெற்று வரும் நிலையில்  இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சூடான் தலைநகர் கார்ட்டூமிலுள்ள சந்தையில் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படையினரைக் குறிவைத்து ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் 19 பேர் கொல்லப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.