கேரளாவில் ரயில் மூலம் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சா பறிமுதல்

கேரளாவில் ரயிலில் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சாவை மோப்ப நாய் கண்டுபிடிக்காத வகையில் கருவாடு வைத்து கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் ஆலுவா…

கேரளாவில் ரயிலில் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சாவை மோப்ப நாய் கண்டுபிடிக்காத வகையில் கருவாடு வைத்து கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் ஆலுவா ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளை சோதனை செய்த போது ஓடிசாவை சேர்ந்த ரஜினிகாந்த் மாலிக், சர்மெந்தா பிரதான் மற்றும் செக்டலா பிரதான் ஆகியோர் கொண்டு வந்த டிராலியை சோதனை செய்த போது அதில் 27 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இவர்களை ஆலுவா ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அந்த கும்பல் கஞ்சாவை டிராலி பைகளில் சிறிய பொட்டலாங்களாக கட்டி வைத்துள்ளனர். போலீஸ் மோப்ப நாய் கண்டுபிடிக்காத வகையில் கருவாடு மற்றும் உலர் இறால்களை டிராலியை சுற்றி வைத்து கஞ்சாவை கடத்தி வந்ததுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் இருந்து வரும் ரயில்களில் சோதனை கடுமையாக இருந்ததால், சென்னை வந்து அங்கிருந்து கேரளாவிற்கு ரயிலில் வந்துள்ளனர். கைது செய்த மூவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.