புதுக்கோட்டை அருகே பூமாலை அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
சீமானூரில் உள்ள பூமாலை அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆண்டு தோறும் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியை திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மற்றும் குளத்தூர் வட்டாட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோல், கட்டில் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் இப்போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








