கேரளாவில் இருச்சகர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் புனலூர் அருகே சுடுகடா என்னும் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
சுடுகடா என்னும் இடத்தில் வளைவான பகுதியில் வரும் போது கட்டுபாட்டை இழந்த இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்து வாகன ஓட்டி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
அப்போது அவரது தலைகவசமும் தனியாக கழன்று சென்றுள்ளது. சாலையில் தூக்கி வசப்பட்ட வாகன ஓட்டி, சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதி தலையில் பலத்த காயத்துடன் உயிழந்தார்.
https://www.youtube.com/watch?v=Qi1GBZKXzrA
இந்த விபத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பலியான வாகன ஓட்டி திருவனந்தபுரம் பகுதியை சார்ந்த சஞ்சீவன் என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து கொல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







