வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.12 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 14.94° வட அட்சரேகையிலும் 90.18° கிழக்கு தீர்க்கரேகையின் மையப்பகுதி அமைந்திருந்தது. நிலநடுக்கத்தால் அந்த பகுதி முழுவதும் சிறிய அளவிலான நில அதிர்வு அலைகள் ஏற்பட்டன. இருப்பினும், இதுவரை எந்தவித சேதமோ, உயிரிழப்புகள் குறிந்த எந்த தகவலும் வெளியாகிவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பரில், வங்காள விரிகுடாவில் 4.4 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







