பெரம்பூரில் விஷம் கலந்த கேக் சாப்பிட்டு இருவர் உயிரிழப்பு!

சென்னை பெரம்பூரில் விஷம் கலந்த கேக்கை சாப்பிட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் செபாஸ்டின் (வயது 42). இவரது மனைவி ரெக்ஸி பியூலா(37). இந்த தம்பதிக்கு இவாஞ்சலின்(8), இமான் ஆண்டோ (4) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் செபாஸ்டின் மனைவி ரெக்ஸிபியூலா புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலனில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த செபாஸ்டின், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு கேக்கில் விஷம் கலந்து கொடுத்து விட்டு, தான் மட்டும் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கேக் சாப்பிட்ட இமான் ஆண்டோ (வயது 4) உயிரிழந்துள்ளார். மற்ற இருவரும் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.