ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் வரை அமெரிக்கா உடன் இருக்கும் என அமெரிக்க பிரதிநிதி சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டு பிரிந்து தனி நாடாக தன்னை அறிவித்து கொண்டது. அப்போது முதல் உக்ரைன் ரஷியாவின் அண்டை நாடாக இருந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாதுகாப்பு அடிப்படையில் 30 நாடுகள் ஒன்றாக இணைந்து உருவான நேட்டோ அமைப்பில் இணைய போவதாக உக்ரைன் தெரிவித்தது. இதனை ஆரம்பம் முதலே ரஷியா கடுமையாக எதிர்த்து வந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் தற்போது வரை நீடித்து வருகிறது.
https://mobile.twitter.com/ZelenskyyUa/status/1520644107751809024
இந்நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி உக்ரைனுக்குச் சென்றார். தலைநகர் கீவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அவர், சுதந்திரத்திற்கான போராட்டத்திற்காக நன்றி தெரிவிக்க வந்ததாகவும், போராட்டம் முடியும் வரை உக்ரைனுடன் இருப்பதாகவும் உறுதி அளித்தார்.
இருவரும் சந்தித்த விடியோவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். ரஷியாவின் அத்துமீறலுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார் .