டெல்லி முதலமைச்சர் #AravindKejriwal -ன் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச்…

Kejriwal's court custody on Sep. Extension to 25

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் மக்களவைத் தேர்தலையொட்டி உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 26ஆம் தேதி சிபிஐ கைது செய்ததால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் சிபிஐ வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். தொடர்ந்து, நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், திகார் சிறையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையும் படியுங்கள் : NeoMax வழக்கு | விசாரணையை துரிதப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

விசாரணையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 25 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பதக் மற்றும் சிலருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.