முக்கியச் செய்திகள் இந்தியா

மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கெஜ்ரிவால் கோரிக்கை

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தன்னலம் பாராமல் மக்கள் சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் பாரத ரத்னா வழங்கப்படுவதே பொருத்தமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா 2ம் அலையில் இதுவரை 700க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தொற்று பாதிப்பால் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய அவர், விருது வழங்கி கவுரவிப்பதே அவர்களுக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்றிய மருத்துவர்களுக்கு பாரத ரத்னா வழங்கி பெருமைப்படுத்தினால் ஒட்டுமொத்த தேசமே அதனைக்கண்டு மகிழ்ச்சிகொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் பாரத ரத்னா விருது வழங்க சட்டத்தில் இடமில்லையென்றால், அதற்கென சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

எப்படி இருக்கிறார் ‘டாக்டர்’? – விமர்சனம்

Saravana Kumar

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் புதிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு

Jeba Arul Robinson

ஸ்டாலினின் மூலதனமே பொய்தான்: முதல்வர்!

Saravana Kumar