உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, திரிவேந்திர சிங் ராவத் முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், அவர் பதவி விலகினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதைத்தொடர்ந்து அங்கு புதிய முதலமைச்சராக, நாடாளுமன்ற உருப்பினர் தீரத் சிங் ராவத் பதவியேற்றார். முதலமைச்சராகப் பதவியேற்ற 6 மாதங்களில் சட்டசபை உறுப்பினராக வேண்டும். ஆனால், அங்கு ஒரு சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தி, அதில் அவர் வெற்றிபெற்று பதவியைத் தக்க வைக்கலாம் என நினைத்தனர்.

இதற்கிடையே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், இப்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லாமல் போனது. இதனால், முதலமைச்சரை மாற்ற பாஜக. தலைமை முடிவெடுத்தது. அதன்படி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய முதலமைச்சராக முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி (வயது 45) தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றுக்கொண்டார். மாநில ஆளுநர் பேபி ராணி மொரியா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.