கரூர் துயரம்: மீண்டும் விசாரணையை தொடங்கிய சிபிஐ…!

கரூர் வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ மீண்டும் தொடங்கியுள்ளது.

கரூர் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் காயம்டைந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவு படி இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

தற்போதைய முதலமைச்சர் விஜய், தவெக நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் உள்ளிட்டோர் விசாரிக்கப்பட்டனர். 2026 தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் கரூர் வழக்கு விசாரணை தற்கலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கரூர் வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ மீண்டும் தொடங்கியுள்ளது. கரூர் சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் சையத் அலி, உதவி ஆய்வாளர்கள், உள்ளிட்ட 10 காவலர்களுக்கு விசாரணைக்காக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் இதுவரை 5 பேர் ஆஜராகி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.