சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்றம் இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன் படி நேற்று (புதன்) கிராமுக்கு ரூ.400 குறைந்து ரூ.13,800-க்கும், பவுனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் தங்க விலை இன்று , கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.13,500-க்கும், சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.5600 குறைந்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன் படி வெள்ளி கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.




