“கரூர் துயரம்: தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடு!” – கனிமொழி

iனி கரூர் துயர சம்பவம் போன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 270ஆம் தேதி கரூரில் முதல்வரும் தவெக தலைவருமான விஜயின் கரூர் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கரூர் துயர சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு வருடத்தை கடந்தது. இதனையொட்டி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது.

இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.