கரூர் தான்தோன்றிமலை வெங்கட்ரமண சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

கரூர் தான்தோன்றிமலையில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி கோயில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கரூர் தான்தோன்றிமலையில் அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தென்திருப்பதி என்றழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம்…

கரூர் தான்தோன்றிமலையில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி கோயில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

கரூர் தான்தோன்றிமலையில் அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தென்திருப்பதி என்றழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது.

திருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலையில் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பெருமாள் தனது துணைவியாருடன் எழுந்தருளினார். பக்தர்களின் பக்தி முழுக்கங்களிடையே திருத்தேர் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.

திருத்தேரோட்டத்தை முன்னிட்டு மலை வீதியை சுற்றியுள்ள மண்டபங்களில் அன்னதானம் அளிக்கப்பட்டது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.