கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு: 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

தேனி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் ஏழாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலுள்ளது கும்பக்கரை அருவி.…

தேனி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் ஏழாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலுள்ளது கும்பக்கரை அருவி. தேனி மாவட்டத்தின் பிரபல சுற்றுலா தலமான இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அருவியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அருவிக்கு நீர் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 6 தினங்களுக்கு முன்பாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கின் அளவு குறையாமல் தொடர்வதால் 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.