தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு தமிழ் நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்வை தொடங்கினார். அப்போது கரூரில் மாவட்டத்தில் நடைபெற்ற விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக் கோரி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமானது கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியது.
நான்கு மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையில் பொதுமக்கள், காவல் அதிகாரிகள் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். தவெக தரப்பில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் சி.பி.ஐ முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர். இந்த நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய்-யை விசாரணைக்கு அழைக்க சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனில் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.







