தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார்.
கோவையின் 10 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடுவோம் எனக்கூறி திராவிடன் அறக்கட்டளை சார்பில் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது. அந்த அமைப்பு சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில் இன்று பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரப்புரை குறித்து பேசிய திமுக வேட்பாளர், தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், அதற்கு திராவிடன் அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் பரப்புரை பேருதவியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.







